முகப்பு
தமிழ்நாடு

காதலுக்கு எதிர்ப்பு: கும்பகோணம் அருகே காதலர்கள் தற்கொலை 

கும்பகோணம் அருகே காதலர்கள் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
அழகர்-பவித்ரா
பகிர்:


கும்பகோணம்: கும்பகோணம் அருகே காதலர்கள் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

கும்பகோணம் அருகே பொன்பேத்தி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி மகள் பவித்ரா (26). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமால் மகன் அழகரும் (33) காதலித்து வந்தனர்.

இக்காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் இருவரும் ஓராண்டுக்கு முன்பு ஊரை விட்டு சென்று விட்டனர். 

இந்நிலையில், கும்பகோணம் அருகே கல்லூர் கிராமத்தில் இருவரும் மரத்தில் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை காலை இறந்து கிடந்தனர்.

தகவலறிந்த சுவாமிமலை காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது உடலையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →