தமிழ்நாடு

விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி தத்தளித்த பழையாறு மீனவர்கள்: காப்பாற்றிய காரைக்கால் மீனவர்கள்

DIN

சீர்காழி: நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, திடீரென விசைப்படகு கடலில் மூழ்கியதில் கடலில் விழுந்து தத்தளித்த பழையாறு மீனவர்கள் ஐந்து பேரை பத்திரமாக மீட்டு காரைக்கால் அழைத்து வந்தனர் காரைக்கால் மீனவர்கள்.

சீர்காழி வட்டம், புதுப்பட்டினம் ஊராட்சி பழையார் மீனவர்கள் செல்வராஜ் மகன் மதி (55) , பெரிய மதி மகன் ஹரிஸ் (22) , அய்யா கண்ணு மகன் நகுலன், வேலுநாடார் மகன் முத்தையா (60), வீரப்பன் மகன் ராஜதுரை (45) ஆகிய 5 பேரும் சேதுராஜன் என்பவருக்கு சொந்தமான பெரிய விசை படகில் சனிக்கிழமை காலை 3 மணியளவில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மூன்றரை கி.மீ கடல் நாட்டி கல் தூரத்திற்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென விசைப்படகு கடலில் மூழ்க தொடங்கியது. இதில் படகில் இருந்த ஐந்து மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

அப்போது அந்த வழியாக மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் விசைப்படகில் கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும் பத்திரமாக ஏற்றிக் கொண்டு காரைக்கால் அழைத்து வந்தனர். 

இந்நிலையில், கடலில் முழுவதுமாக மூழ்கிய படகை  கடலூரில் இருந்து வரும் சிறப்புக் குழுவினர் சிலிண்டர் உதவியுடன் கடலில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

SCROLL FOR NEXT