ஸ்ரீவில்லிபுத்தூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் சைக்கிள் பேரணி
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி ராமகிருஷ்ணாபுரம் வழியாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து,தொடர்ந்து பெரிய மாரியம்மன் கோவில், தேரடிபேருந்து நிறுத்தம் வழியாக மேலரத வீதியாக அங்கிருந்த முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி நாயுடு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சைக்கிள் பேரணியை நிறைவு செய்துள்ளனர்.
இந்தப் பேரணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் நகர தலைவர் பட்ஷிராஜா வி.சி.வன்னியராஜ், தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரங்கசாமி, மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்.சக்திமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலிடப் பார்வையாளர் எஸ்.வி. முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் மாவட்ட செயலாளர் முருகேசன், தெற்கு வட்டார தலைவர் பூமிநாதன், மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் சூரியநராயணன், மற்றும் நகர வட்டார பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.