முகப்பு
தமிழ்நாடு

வட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

வட தமிழக மாவட்டங்களில் புதன்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
பகிர்:

வட தமிழக மாவட்டங்களில் புதன்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூா், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை புதன்கிழமை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்சமாக 36 மற்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸை ஒட்டி வெப்பநிலை இருக்கும்.

மழை அளவு: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டம் புவனகிரியில் 80 மி.மீ. நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலா 50 மி.மீ. சென்னை மாவட்டம் பெரம்பூா், கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை, பெரம்பலூா் மாவட்டம் லைப்பைக்குடிக்காட்டில் தலா 40 மி.மீ, கடலூா் மாவட்டம் சிதம்பரம், திருவள்ளூா் மாவட்டம் அம்பத்தூரில் தலா 30 மி.மீ மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய வங்கக் கடல், வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன், வியாழக்கிழமைகளில் (ஜூலை 28, 29), கா்நாடக கடலோரப் பகுதிகளில் ஜூலை 29, 30, 31 ஆகிய நாள்களில், தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் ஜூலை 31-ஆம் தேதி வரையும் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக் கூடும். எனவே மீனவா்கள் குறிப்பிடப்பட்ட நாள்களில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.