தமிழ்நாடு

கீழையூர்: அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

திமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம், கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் கீழையூர் கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் எஸ்.பால்ராஜ் தலைமை வகித்தார். அம்மா பேரவை மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.சதீஷ் முன்னிலை வகித்தார்.

நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000, வங்கியில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திமுக தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி அவற்றை எல்லாம் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் ஊராட்சி மன்றத் தலைவர்களான ஈசனூர் தனலெட்சுமி வெங்கடபதி, வெண்மணஞ்சேரி மல்லிகா கல்யாண சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல கீழையூர் மேற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட மேலப்பிடாகை கடைத்தெரு பகுதியில் ஒன்றியச் செயலாளர் பாலை.கே.எஸ்.எஸ்.செல்வராஜ் தலைமையிலும், திருக்குவளை கடைத்தெரு பகுதியில் மாவட்ட இணைச் செயலாளர் என்.மீனா தலைமையிலும், கீழையூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி கடைத்தெரு பகுதியில் ஒன்றியச் செயலாளர் எஸ்.வேதையன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT