மேச்சேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி பேருந்து நிலையம் முன்பாக திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடுமேச்சேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி பேருந்து நிலையம் முன்பாக திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி பேருந்து நிலையம் முன்பாக திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து மேச்சேரி பேருந்து நிலையம் முன்பாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நேரத்தில், நீட் தேர்வு ரத்து,கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுன் தங்க நகைக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி, குடும்ப அட்டையில் உள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைத்த திமுக, தற்பொழுது எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் இருப்பதைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேச்சேரி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் சாமியண்ணன் தலைமை வகித்தார். இதில் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சந்திரசேகர், மேற்கு ஒன்றியச் செயலாளர் செல்வம், மேச்சேரி முன்னாள் பேரூராட்சித் தலைவர் சி.ஜே.குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கே.கலையரசன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் துரைசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் சின்னத்தம்பி, மதுரை மண்டல தொழில்நுட்ப பொருளாளர் பானு பிரதாப், மேச்சேரி பெரு இளைஞரணிச் செயலாளர் வெங்கட ராஜ், மேச்சேரி தொழில்நுட்ப கிளை இணைச் செயலாளர் முரளி, மேச்சேரி தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபு மற்றும் பேரூர் கிளை கழக மற்றும் சார்பு கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.