மளிகைப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: சென்னை ஆணையர் எச்சரிக்கை
கூடுதலான விலைக்கு மளிகைப் பொருட்கள் விற்றால் கண்டிப்பாக மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மளிகைப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு காய்கறி, மளிகைப் பொருள்களை அதிக விலைக்கு விற்றால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு அமலில் இருந்து வருகிறது. அதன்படி, நேற்று ஒரேநாளில் 2,197 வியாபாரிகள் முன்பதிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.