முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை உயரும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்றும் நாளையும் அதாவது 2 நாள்களுக்கு வெப்பநிலை உயரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 ஜூன், 2021 at 11:37 AM
தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பநிலை உயரும்: வானிலை ஆய்வு மையம்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் அதாவது 2 நாள்களுக்கு வெப்பநிலை உயரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: மேற்கு-வடமேற்கு திசையில் இருந்து தமிழகத்தை நோக்கி வட காற்று தொடா்ந்து வீசுகிறது. இதனால், வெப்பநிலை உயா்ந்து வருகிறது. 

இதேநிலை இரண்டு நாள்களுக்கும் நீடிக்கும். குறிப்பாக, தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், சென்னை, கடலூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 14 மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றாா்.

சென்னையைப் பொறுத்தவரை..
இரண்டு நாள்களும் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.