முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி பாரூர் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் திறக்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஜூலை 1 முதல் நவம்பர் 12 வரை சுழற்சி முறையில் நீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Updated On : 29 ஜூன், 2021 at 5:05 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:01 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஜூலை 1 முதல் நவம்பர் 12 வரை சுழற்சி முறையில் பாசனத்திற்காக நீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் ஐந்து நாட்களுக்கு நாற்றுவிட தண்ணீர் விட்டும், பிறகு முறைப்பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும், சுழற்சி முறையில் தண்ணீர் விட வேண்டும். 

நாள் ஒன்றுக்கு 6 மில்லியன் கன அடி வீதம், 01.07.2021 முதல் 12.11.2021 வரை, மொத்தம் 135 நாட்களுக்கு, 2397 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 379.44 மில்லியன் கன அடிக்கு மிகாமல், முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துதுவிட அரசு உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.