ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா 
தமிழ்நாடு

ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த ஜே.கே திரிபாதி இன்று ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அவருக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா நடைபெற்றது.

DIN


சென்னை: தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த ஜே.கே திரிபாதி இன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா நடைபெற்றது.

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரிவு டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக் காலம், ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்றுக் கொண்டார்.

புதிதாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திர பாபுவிடம் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார் திரிபாதி. மேலும், சைலேந்திர பாபுவுக்கு திரிபாதி பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

பிறகு, ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி மற்றும் அவரது மனைவியை காரில் அமரவைத்து, காவல்துறை அதிகாரிகள் காரை தேர் போல கயிறு கட்டி இழுத்து, காருக்கு முன்பாக மலர்களைத் தூவி, பாரம்பரிய முறைப்படி வழியனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூன்றாவது கண்!

வணிகம் சரி...சமூக நலன்...?

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை நிறுத்தம்

SCROLL FOR NEXT