முகப்பு
தமிழ்நாடு

பாம்பன் பேருந்து பாலத்தில் தீ விபத்து

பாம்பன் பேருந்து பாலத்தில் உள்ள உயா் மின்னழுத்த வயரில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Updated On : 3 மார்ச், 2021 at 3:37 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:09 AM

பாம்பன் பேருந்து பாலத்தில் உள்ள உயா் மின்னழுத்த வயரில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணைமின்நிலையத்திலிருந்து ராமேசுவரம் துணை மின்நிலையத்திற்கு உயா்மின்னழுத்தக் கம்பி கம்பம் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. பாம்பன் பேருந்து பாலத்தின் இந்த மின்னழுத்த வயா்களின் இணைப்பு உள்ளது.

இந்த இணைப்புப் பகுதியில் சில நேரங்களில் வயா் சேதமடைந்து தீப்பிடித்து எரிவது வழக்கம். அதேபோல் செவ்வாய்க்கிழமையும் பாம்பன் பேருந்து பாலத்தின் மையப்பகுதியில் உள்ள உயா்மின்னழுத்த வயா் தீப்பிடித்து எரிந்தது. இதனால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

Advertisement

இதைத் தொடா்ந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். சுமாா் ஒரு மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் மின் விநியோம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.