விராலிமலையில் திமுக தேர்தல் அலுவலக முகூர்த்தகால் நடும் விழா
விராலிமலையில் திமுக தேர்தல் அலுவலக முகூர்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது
விராலிமலையில் திமுக தேர்தல் அலுவலக முகூர்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு தொடர் நிகழ்வாக விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட விராலிமலையில் அம்மன் கோவில் தெருவில் திமுக தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.
இதில், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அ.இளங்குமரன், நகரச் செயலாளர் க.சண்முகசுந்தரம், இளைஞரணி எஸ்.சிவா, வெங்கடேஷ் ஜா.கௌதமன், சக்திவேல் எம்.தனசேகர்.த. ரங்கராஜ், திருப்பதி, லோகநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.