அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: ஜி.கே. வாசன்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - தமாகா இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன், பேரவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மீண்டும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறினார்.
மேலும், தமாகா சார்பில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில் அதிமுக 6 தொகுதிகளைத் தருவதாகக் கூறுகிறார்கள். கூடுதல் தொகுதிகளைப் பெற தொடர்ந்து பேசி வருகிறோம், தொகுதிகளை உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடைசி நிமிடம் வரை போராட்டம் தொடரும். வெல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.