முகப்பு
தமிழ்நாடு

தந்தை கொளத்தூரில் மகன் சேப்பாக்கத்தில்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியிலும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
தந்தை கொளத்தூரில் மகன் சேப்பாக்கத்தில்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியிலும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளரும் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். 

இதற்கடுத்து, முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் ஐ. பெரியசாமி என்று அறியப்படும் ஐ. பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமார் பழனி தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச் செயலாளராக இருந்த மறைந்த அன்பழகனின் பேரன் அ. வெற்றி அழகன் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தி.நகர் தொகுதியில், மறைந்த எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் சகோதரர் ஜெ. கருணாநிதிக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் பொய்யமொழியின் மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கும் திருவெறும்பூர் தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →