முகப்பு
வேட்புமனுத் தாக்கல் செய்யும் துரைமுருகன்.
தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன்: துரைமுருகன்

சட்டப்பேரவைத் தேர்தலில் 12வது முறையாகப் போட்டியிடும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி பேரவை தொகுதியில் போட்டியிட 10-வது முறையாக திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
வேட்புமனுத் தாக்கல் செய்யும் துரைமுருகன்.
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் 12வது முறையாகப் போட்டியிடும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி பேரவை தொகுதியில் போட்டியிட 10-வது முறையாக திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தார்.

இதையொட்டி அவர் காட்பாடி செங்கோட்டையில் இருந்து ஊர்வலமாகச் சென்று சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் ஊர்வலமாக காட்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகம் வந்தடைந்தார். அங்கு அவர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணிய கோட்டியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.‌

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பன்னிரண்டாவது முறையாகவும், காட்பாடி தொகுதிக்கு பத்தாவது முறையாகவும் போட்டியிடுகிறேன். இத்தனை ஆண்டுக்காலம் போட்டியிடுகிறேன் என்றால் அந்த அளவுக்கு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்ற அர்த்தம். அதிகாரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டால் மக்கள் தொடர்ந்து தேர்ந்தெடுப்பார்கள் என்பதே இதற்கு உதாரணமாகும். 

தேர்தலையொட்டி திமுகவும் அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இதில் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லனாகவும் உள்ளது. எப்போதும் தேர்தலைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. வழக்கம்போல் இந்தத் தேர்தலிலும் போட்டி கடுமையாகவே இருக்கும். ஆனால் திமுகதான் வெற்றி பெறும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →