சித்திரை மாதம் முழு நிலவு நாள் வருவதால் புதர்செடிகள் மண்டிக்கிடக்கும் கண்ணகி கோயிலைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கண்ணகி அறக்கட்டளையினர் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
தமிழக கேரள எல்லையில், தமிழகப்பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் வரும் ஏப். 27-ல் சித்திரை முழு நிலவு நாள் விழா நடைபெறுகிறது. இது தொடர்பாக மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் த.ராஜகணேசன், பி.எஸ்.எம்.முருகன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, நேரில் மனு கொடுத்தனர். அதில் சித்திரை முழு நிலவு விழா வரும் 27.4.2021ல் நடைபெறுகிறது,
இந்நிலையில் தற்போது, கோயில் வளாகம் முழுவதும் புதர்செடிகள், முட்புதர்கள் நிறைந்து கிடக்கின்றன. இவற்றை அகற்ற வேண்டும், ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும், முழு நிலவு விழா அன்று சுற்றுலாத்துறை மூலம் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
விழா நாளன்று தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும், வருடத்திற்கு 24 நாள்கள் கண்ணகி கோயிலில் பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.