முகப்பு
தமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: விதிமீறல் வழக்குப் பதிவு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், விதிகளை மீறி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Updated On : 10 மே, 2021 at 9:26 PM
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: விதிமீறல் வழக்குப் பதிவு
பகிர்:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், விதிகளை மீறி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

சென்னை ராயப்பேட்டையில் விதிமுறைகளை மீறி ஏராளமானோர் கூட்டமாக கூடியதால், அதிமுக நிர்வாகி மகாலிங்கம் உள்பட 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Advertisement

சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், இன்று (மே 10) காலை மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.