கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் கபசுரக்குடிநீர், முகக்கவசம்
தேனி மாவட்டம் கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் கபசுரக்குடிநீர் முககவசங்கள் செவ்வாய் கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
கம்பம்: தேனி மாவட்டம் கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் கபசுரக்குடிநீர் முககவசங்கள் செவ்வாய் கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கூடலூர் 4-வது வார்டு மந்தையம்மன் கோவில் முன்பு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்ககவசம் வழங்கும் நிகழ்வு கிருஷ்ணமூர்த்தி தலைமையில்நடைபெற்றது. நிகழ்ச்சியை திரைப்படநடிகரும் தயாரிப்பாளருமான மு.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கீழக்கூடலூர் கிராமத்தலைவர் மேகராசா முகக்கவசங்களை வழங்கவும் கூடலூர் நகராட்சி துப்புறவு ஆய்வார் ரவிச்சந்திரன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பற்றி பேசினார்.
செயலாளர் கஜேந்திரன், துணை தலைவர் லோகேந்திரன், துணைச் செயலாளர் திலகர், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 1,200 பொதுமக்கள் நேரில்வந்துகபசுரகுடிநீர் பருகினர் வீடுகளுக்கும் வாங்கிச் சென்று பருகினர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை ப.புதுராசா செய்தார்.