மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியதை முன்னிட்டு வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்த ஸ்ரீ முருகப்பெருமான். 
தமிழ்நாடு

மானாமதுரை, திருப்புவனம் பகுதி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கந்தசஷ்டி விழா தொடங்கியது. 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கந்தசஷ்டி விழா தொடங்கியது. 

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் சன்னதியில் கந்தசஷ்டி விழா தொடங்கியதை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர், திரவியம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி மூலவர் முருகப் பெருமான் வேலுடன் வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் எழுந்தருளினார். 

அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். 

மேலும் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து முருகனை தரிசித்து கந்தசஷ்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து 7 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் நிறைவாக 11 ஆம் தேதி பாவாடை நெய்வேத்திய வழிபாடு நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி முதல் நாள் விழாவில் திரண்ட பக்தர்கள்.

மேலும் மானாமதுரையில் புறவழிச்சாலையில் உள்ள ஸ்ரீ வழிவிடு முருகன் கோயில்,ரயில்வே நிலையம் எதிரே உள்ள பூர்ணசக்கர விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பாலமுருகன் சன்னதி தாயமங்கலம் சாலையில் உள்ள சுப்பிரமணியர் கோயில் இடைக்காட்டூர் பாலமுருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயிகலில் கந்தசஷ்டி விழா தொடங்கியுள்ளது. 

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயிலில் உள்ள முருகன் சன்னதி உள்ளிட்ட இப்பகுதியில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா சிறப்பாக தொடங்கியுள்ளது. ஏராளமானோர் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். 

மானாமதுரை, திருப்புவனம் மற்றும் இளையான்குடி பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி கந்த சஷ்டி விரதம் தொடங்கி யுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

பட்டுப் புன்னகை... சரண்யா துராடி!

நினைவின் மயக்கம்... ஸ்ரீகெளரி பிரியா!

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!

பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? - திமுகவுக்கு அதிமுக அடுக்கடுக்கான கேள்வி!

SCROLL FOR NEXT