தமிழ்நாடு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்புகளும் நன்றிகளும்

DIN


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து வரும் பல்வேறு அறிவிப்புகளால் பயன்பெற்றவர்கள் மற்றம் பயன்பெறுபவர்கள், அவரை நேரில் சந்தித்துத் தங்களது நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று,

தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிட்டமைக்காக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை காவலர்கள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். உடன் காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் உள்ளனர்.

மேலும் படிக்க.. குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு வரியில் பதில்

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயரில் மகளிர் கல்லூரி அமைத்திட உதவியதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் எஸ். ராமசாமி, செயலாளர் எஸ். கோவிந்தப்பன், பொருளாளர் எம். கந்தசாமி, துணைத் தலைடிவர்கள் பி. முருகசாமி, ஆர். குப்புசாமி, இணைச் செயலாளர் என். துரைசாமி ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.

தமிழகத்தில் சிறப்புக் குழந்தைகள் நீச்சல் குளத்தில் பயிற்சி பெற அனுமதி அளித்தமைக்காக, சங்கமித்ரா அறக்கட்டளை சார்பில் ஜிஷா ரமேஷ், கிரேஷ், அன்னபூரணி, வனிதா, சதீஷ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT