தமிழ்நாடு

'காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்தது'

தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. 

DIN

தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. 

வடமேற்கு திசையில் நகர்ந்து 11-ஆம் தேதி காலை தமிழக கடற்கரை பகுதியை வந்தடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, நாளை (நவ.11) மாலை வடகடலோரப் பகுதியான கடலூர் அருகே காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிஹோட்டாவுக்கும் இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது புதுச்சேரிக்கு 420 கிலோ மீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. சென்னையில் இருந்து 430 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையைக் கடக்கும்போது புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

நாளை (நவ.11) சென்னை, திருவள்ளூர்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழை பெய்யும்.

ஓரிரு இடங்களில்‌ அதி கன மழையும்‌, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி, காரைக்கால்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மா்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

சைபா் குற்றங்கள்: ரூ.21.69 கோடி மீட்பு

பாளை.யில் அன்புமணி பேரணிக்கு அனுமதி மறுப்பு: இன்று பாமக பொதுக்கூட்டம்

10 கிலோ தங்க நகைகள் கொள்ளை வழக்கில் 9.432 கிலோ நகைகள் மீட்பு; ராஜஸ்தானைச் சோ்ந்த 2 போ் கைது

வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: தோ்தல் ஆணையம் பதில் மனு

SCROLL FOR NEXT