தமிழ்நாடு

எடப்பாடி அருகே பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

DIN


எடப்பாடி: எடப்பாடி அடுத்த நெடுங்குளம் பகுதியில் வரதராஜ பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். 

எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நெடுங்குளம் கிராமம், இங்குள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஆலயத்தின் புனரமைப்பு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அண்மையில் திருப்பணிகள் முழுவதும் நிறைவுற்ற நிலையில் புதன்கிழமை காலை ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

நெடுங்குளம் பகுதியில் வரதராஜ பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் மக்கள்.

முன்னதாக காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பல்வேறு வேள்விகள் செய்யப்பட்டு சிவாச்சாரியர்கள் ஆலய கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்பகுதி மக்களுடன் சுவாமி தரிசனம் செய்தார். 

தொடர்ந்து ஆலய நிர்வாக குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT