தமிழ்நாடு

கனமழை: சீர்காழி வட்டத்தில் இதுவரை 83 வீடுகள் இடிந்து சேதம், 53 கால்நடைகள் இறப்பு

DIN


சீர்காழி:  தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழைக்கு சீர்காழி வட்டத்தில் இதுவரை 83 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்டைந்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக சீர்காழி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் சீர்காழி வட்டாரத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழைக்கு சீர்காழியில் கூரை வீடு இடிந்து விழுந்ததில் காயமடைந்த முதியவர்.

மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதனிடையே சீர்காழி,கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கனமழைக்கு 74 கூரைவீடுகள் இடிந்து பகுதி சேதம் ஏற்பட்டுள்ளது. அதே போல் 9 ஓட்டு வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளது.

தொடர்மழையால் 29 ஆடுகள், 3ஆட்டுகுட்டிகள்,10 பசுமாடுகள்,11 கன்றுகள் இறந்துள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT