சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். 
தமிழ்நாடு

திருவொற்றியூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி

சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. 

DIN

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. 

சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராஜாஜி நகர் கார்கில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிப் பொருள்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பகுதி கழக செயலாளருமான கே. குப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு நிவாரண உதவிப் பொருள்களை வழங்கினார்.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாய் அரிசி, பால், ரொட்டி வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருள்களை வாங்கி சென்றனர்.

முன்னதாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பரமசிவம் சிவில் முருகேசன் கார்த்திக் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT