தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து 3 பேர் காயம்

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் 65 வயது முதியவர் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே, கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் சத்துணவு அமைப்பாளர் மணி என்பவரின் வீட்டில் வைகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (65) குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சந்திரசேகர் வசிக்கும் வீட்டின் மேற்கூரை பூச்சு,  திங்கள்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இதில், சந்திரசேகரின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், ரமேஷின் மனைவி புனிதா (34), இவரது மகன் புர்னேஷ் (2) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இந்த மூன்று பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT