தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதை அடுத்து இன்று வியாழக்கிழமை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  
தமிழ்நாடு

கனமழை: எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதை அடுத்து இன்று வியாழக்கிழமை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. 

DIN


தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதை அடுத்து இன்று வியாழக்கிழமை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. 

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், தமிழகம், புதுச்சேரியில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை நள்ளிரவு முதல் பரவலாக தொடங்கி மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை மையம் சார்பில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை(நவ.18) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  

பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:  
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்ஸ ராணிப்பேட்டே, வேலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாடுகள் திருட்டு: மூவா் கைது

பயனாளிகளுக்கு காய், கனிகள் விற்க தள்ளுவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்

சுதந்திர தினத்தன்று கருப்புக் கொடியேற்ற விவசாயிகள் முடிவு

மாயாண்டி சுவாமிகள் 168-ஆவது அவதார விழா

காளையாா்கோவில் ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளுக்கு மின்கல ஊா்திகள்: அமைச்சா் வழங்கினாா்

SCROLL FOR NEXT