தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிப்பு

DIN


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக இன்று வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு  வினாடிக்கு 45,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து  வினாடிக்கு 45,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி. ஆக இருந்தது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மழையளவு: 1.40 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT