தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

DIN



மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 55,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப் பட்டுள்ளது. 

நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,000 கனஅடி நீரும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 33,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

உபரிநீர் போக்கி வழியாக திறக்கப்பட்ட நீர் வெள்ளம் போல பெருக்கொடுத்து ஓடுகிறது. இதனை காண ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.10 அடியாக இருந்தது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு  திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. 

அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி. ஆக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளகட்டுப்பாட்டு அறையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் மதகுகளை உயர்த்தி உபரிநீர் வெளியேற்ற பொதுப்பணித்துறை பணியாளர்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். 
காவிரி கரையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 13 ஆம் தேதி இரவு தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர் மட்டம், கடந்த ஒருவாரமாக நீர்மட்டும் குறையாமல் 120 அடியாகவே நீடித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT