தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 750 பேருக்கு கரோனா; 13 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 750   பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். 

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 750   பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் நேற்று 756 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 750 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை திங்கள் கிழமை (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதிதாக 1,01,397 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 750 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,21,021-ஆக அதிகரித்துள்ளது.

ஒருநாளில் மட்டும் 13 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,388-ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 843 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,76,017-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,57,206-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 8,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கோவையில் 125 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,248 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு நாளில் மட்டும் 107 பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT