தமிழ்நாடு

இலங்கை கடற்படையினரால் கைதான நாகை மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு

DIN

இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 23 பேர் இன்று சென்னை வந்தடைந்தனர். 

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்திலிருந்து கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இரண்டு மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்தப் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இது சம்பந்தமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன்  தீவிர முயற்சி மேற்கொண்டதன் பெயரில் இலங்கை பாயிண்ட் பெட்ரோ நீதிமன்றத்தில் இதுகுறித்து நடைபெற்று வந்த வழக்கில் அந்த 23 மீனவர்களை சிறையிலிருந்து விடுவித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் விடுதலை ஆனவர்கள் அனைவரும் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 4.15 மணி அளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர். சென்னையைச் சேர்ந்த பாஜக மாநில மீனவர் பிரிவு நிர்வாகிகள் அவர்களை வரவேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களை இலங்கை சிறையிலிருந்து மீட்டெடுத்த முழு பெருமையும் மத்திய இணை அமைச்சர்  எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரைச் சேரும் என்று கூறி நன்றி தெரிவித்தார். இன்று வருகை புரிந்த 23 பேரில் 5 பேருக்கு கரோனா இருப்பதால் 18 பேர் மட்டும் இன்று ஊருக்குச் செல்ல இருக்கிறார்கள், மற்றவர்கள் சிகிச்சை முடிந்து குணமானபின் ஊருக்குச் செல்வார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT