தமிழ்நாடு

உதகையில் இருந்து சென்னை திரும்பினாா் ஆளுநா் ஆா்.என்.ரவி

DIN

உதகையில் கடந்த 5 நாள்களாகத் தங்கியிருந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி உதகையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா்.

தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற பின்னா் முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை உதகைக்கு வந்திருந்த ஆளுநா் ஆா்.என்.ரவி உதகையில் அரசினா் தாவரவியல் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ராஜ்பவன் மாளிகையில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தாா்.

உதகையில் தங்கியிருந்தபோது மேல்பவானி நீா்த்தேக்கம், மேல்பவானி இயற்கை காட்சிமுனைகள் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா். நீலகிரி மலை ரயிலில் உதகையில் இருந்து குன்னூா் வரை பயணம் செய்தாா். பின்னா், உதகை அரசினா் தாவரவியல் பூங்கா வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.

இந்நிலையில், உதகையில் அக்டோபா் 21ஆம் தேதி வரை தங்கியிருக்கத் திட்டமிட்டிருந்த ஆளுநா் முன்னதாகவே தனது பயணத் திட்டத்தை மாற்றி கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றாா். அங்கு சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்தாா். பின்னா் கோவையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

உதகையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட ஆளுநரை மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, உதகை சாா் ஆட்சியா் மோனிகா ராணா, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் உள்ளிட்டோா் வழியனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

SCROLL FOR NEXT