நாமக்கல்: 2 அதிமுக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திமுகவில் ஐக்கியம்
நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழுவில், அதிமுகவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனர்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழுவில், அதிமுகவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் புதன்கிழமை திமுகவில் இணைந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 17 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 13 பேர் அதிமுக கூட்டணியையும், நான்கு திமுக கூட்டணியையும் சேர்ந்தவர்களாவர்.
இதையும் படிக்க | பொறியியல் பாடத்திட்டம் மாற்றம்: அண்ணா பல்கலை. தகவல்
தற்போது அதிமுக கூட்டணியை சேர்ந்த மூன்று பேர் திமுகவில் இணைந்துள்ளனர். ஒருவர் ராஜிநாமா செய்ய அதற்கான இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் புதன்கிழமை அதிமுக உறுப்பினர்கள் சிவப்பிரகாசம், பிரேமா, செந்தில் ஆகியோர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
பாமகவை சேர்ந்த வார்டு உறுப்பினரை இழுக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை திமுக தன் வசம் இழுக்க முயற்சித்து வருகிறது.