தமிழ்நாடு

நெருங்கும் தீபாவளி: கூடுதல் தளர்வுகளா? கட்டுப்பாடுகளா? முதல்வர் ஆலோசனை

DIN

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா அல்லது கட்டுப்பாடுகள் பிறப்பிக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அக். 31ஆம் தேதியுடன் நிறைவடையவிருக்கும் நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று அடுத்தக்கட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

நவம்பர் 1ஆம் தேதி தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், அரசியல், சமுதாய மற்றும் கலாசார நிகழ்வுகள் நடத்துவதற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பள்ளிகள் திறக்கப்படவிருப்பதாலும், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பவிருப்பதாலும், பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகளை அளிப்பதா அல்லது கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா என்பது குறித்தும் சுகாதாரத் துறை நிபுணா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 

தமிழகத்தில் கடந்த மே மாதம் கரோனா தொற்று பரவல் தொடா்ச்சியாக அதிகரித்தது. நோய்த் தொற்றால் பாதித்தவா்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 36 ஆயிரத்தைக் கடந்தது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னா் பொது மக்களின் நலன் கருதி தொடர்ந்து படிப்படியான தளா்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயா் அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடா்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT