முகப்பு
தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை: ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

Updated On : 26 அக்டோபர், 2021 at 1:16 PM
வடகிழக்குப் பருவமழை: ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
பகிர்:


சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாகத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றுள்ளனர். பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் பாதுகாப்பு,  சுகாதாரம் மற்றும் பல பணிகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

Advertisement

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்களுடன் பல துறை அமைச்சர்களும், அரசுத் துறை செயலாளர்கள், உயரதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.