முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து ஜே.எம்.பஷீர் நீக்கம்

அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலர் ஜே.எம்.பஷீர் அப்பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலர் ஜே.எம்.பஷீர் அப்பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு(மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.எம்.பஷீர், கட்சி சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.