தமிழ்நாடு

2 மாடிக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களில் மின்தூக்கி கட்டாயம்

DIN


சென்னை: தமிழகத்தில் இனி, புதிதாகக் கட்டப்படும் 2 மாடிகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்களில் கட்டாயம் மின்தூக்கி வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக, இனிமேல், 2 மாடிகளுக்கு மேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் கட்டாயம் மின்தூக்கி வசதி இருக்க வேண்டும்.

மேலும், சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும்.  பார்வையற்றோருக்கான அறிவிப்புப் பலகை, தனி வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டப்பட வேண்டியது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தின்பண்டங்களில் உப்பின் அளவைக் குறிப்பிடக் கோரிக்கை

தாடாளன் பெருமாள் கோயில் தங்க கருடசேவை

தலைப்பு மாற்றம் ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 677 புள்ளிகள் உயா்வு

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

தன்னம்பிக்கையின் வெளிப்பாடு...

SCROLL FOR NEXT