தமிழ்நாடு

புதுவையில் பி.ஆர்க். படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

DIN

புதுச்சேரி : புதுவையில் பி.ஆர்க்., படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் செப்டம்பர் 13 முதல் தொடங்கியது. இதற்காக மாணவர்கள் Centacpuducherry.in என்ற இணையதளத்தில் 19.9.2021 வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுவை மாநிலத்தில் நீட் அல்லாத இளநிலை (யுஜி) தொழில்முறை படிப்பு (பி.ஆர்க் )சேர்க்கைக்காக புதுச்சேரி மாநில தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2021-22 கல்வியாண்டில், மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தை www.centacpuducherry.in மூலம் 13.09.2021 முதல் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 19.09.2021 மாலை 5 வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்கள் என்ஏடிஏ மதிப்பெண் அடிப்படையில் தங்கள் தகுதியை மதிப்பிட்ட பிறகு விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, சென்டாக் இணையதளம் www.centacpuducherry.in ஐப் பார்க்கவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT