வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை (செப்.24) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த மாதிரிக் கல்லூரி கடந்த ஆண்டு முதல், அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகு முந்தய நிர்வாகத்தின் பேரில் இருந்து வந்த பராமரிப்பு உள்ளிட்ட பல நடைமுறைகள் கவனம் குறைந்து வருகிறது.
இதையும் படிக்க | மக்களின் எதிர்ப்புகளை மீறி தலைவராகும் பட்டியலின இளம்பெண்!
கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், வேதாரண்யம் அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக்கோரி செப்.22-இல் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.
3-ஆவது நாளாக இன்றும் (செப்.24) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.