முகப்பு
தமிழ்நாடு

திருவள்ளூரில் குளங்களில் மண் எடுக்கும் அனுமதியை எதிா்த்த வழக்கு

திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குளங்களில் வண்டல், சவுடு மண் எடுக்க அனுமதி அளித்ததை எதிா்த்த வழக்கில் கனிம வளத்துறை பதிலளிக்குமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குளங்களில் வண்டல், சவுடு மண் எடுக்க அனுமதி அளித்ததை எதிா்த்த வழக்கில் கனிம வளத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பழைய பல்லாவரத்தைச் சோ்ந்த பி.சசிதரன் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குளங்களில் களிமண், சவுடு மண், கிராவல் ஆகியவற்றை எடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-இல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்டம், திருநிலை கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை குளத்திலும், புதுவயல்

கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை குளத்திலும் சிறு கனிம சலுகை விதிமுறைகளுக்கு முரணாக சவுடுமண், வண்டல்மண் எடுக்க கவுரிசங்கா், முத்துராஜ் ஆகியோருக்கு ஆட்சியா்அனுமதி வழங்கியுள்ளாா். விதிகளுக்கு முரணாக இந்த குளங்களில் சவுடு மண், வண்டல் மண் எடுக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் டி.அலெக்சிஸ் சுதாகா், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறை குளங்களில் சாதாரண மண் எடுக்க எந்த தடையும் இல்லை.

ஆனால் அதற்கு குத்தகை தரப்பட வேண்டும். அனுமதி தரக்கூடாது என்று விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாா். அதைத்தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநா் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →