சென்னையில் 26ஆம் தேதி 400 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைப் பரவலாக்கும் முயற்சியாக சென்னையில் 400 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைப் பரவலாக்கும் முயற்சியாக சென்னையில் 400 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | நாட்டின் சொத்துகளை விற்கிறது பாஜக: ராகுல் குற்றச்சாட்டு
கரோனா மூன்றாம் அலை முன்னெச்சரிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் வார்டுக்கு 2 தடுப்பூசி முகாம்கள் வீதம் 400 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | பாராலிம்பிக்ஸ் தொடக்க விழா: நேரலை விடியோ
ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ள மாநகராட்சி இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.