முகப்பு
தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
கோப்புப்படம்
பகிர்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயாா் அற்புதம்மாள் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தாா்.

அதன்படி, பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கிய நிலையில், கடந்த மே 28 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து  விடுவிக்கப்பட்டார். 

பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை நடைபெற்று வருவதால் மேலும் ஒரு மாதம் பரோல் மீட்கப்பட்டது. 

தொடர்ந்து, நாளையுடன் பரோல் காலம் முடிவடைய உள்ள நிலையில் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மூன்றாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.