முகப்பு
தமிழ்நாடு

சென்னை, கோவையில் குறையும் கரோனா

சென்னை மற்றும் கோவையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

Updated On : 13 செப்டம்பர், 2021 at 8:51 PM
சென்னை, கோவையில் குறையத் தொடங்கியது கரோனா
பகிர்:

சென்னை மற்றும் கோவையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

இரு மாவட்டங்களில் நேற்று கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், இரு மாவட்டங்களிலும் இன்று குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 197 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 185-ஆக குறைந்துள்ளது. 

Advertisement

கோவையில் நேற்று 212 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 204-ஆக குறைந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 105 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், தஞ்சாவூரில் 109 பேருக்கும், திருப்பூரில் 84 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.