தமிழ்நாடு

மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொல்லவே இல்லை: கே.அண்ணாமலை

DIN

மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொல்லவே இல்லை என்று பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசுதான் குறைவாக உயர்த்தியுள்ளது என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயா்வானது (2022-2023) உடனடியாக அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் அதிகபட்சம் 150 சதவீதம் வரை சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது.

சொத்து வரி உயர்வுக்கு கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, இந்தியா முழுவதும் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசுதான் குறைவாக உயர்த்தியுள்ளது. 31ஆம் தேதிக்குள் சொத்து வரி உயர்த்தாவிட்டால் இந்த ஆண்டு உள்ளாட்சி அமைப்புக்கான நிதி தரப்படாது என மத்திய அரசு கூறிவிட்டது என்றார். 

ஆனால், மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொல்லவே இல்லை என்று பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சொத்து வரி உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு மீது பொய் புகார் தெரிவித்து தமிழக அரசு கபட நாடகம். சொத்து மதிப்புக்கு வரியா? சொத்து மதிப்பே வரியா? வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT