முகப்பு
தமிழ்நாடு

கரோனாவிலிருந்து டக்-அவுட் ஆன மணலி, மாதவரம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மணலி மற்றும் மாதவரம் மண்டலங்கள் முதல் முறையாக பூஜ்யம் கரோனா நோயாளிகளுடன் கரோனாவிலிருந்து விடுபட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
கரோனாவிலிருந்து டக்-அவுட் ஆன மணலி, மாதவரம்
பகிர்:


சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மணலி மற்றும் மாதவரம் மண்டலங்கள் முதல் முறையாக பூஜ்யம் கரோனா நோயாளிகளுடன் கரோனாவிலிருந்து விடுபட்டுள்ளன.

அதேவேளையில், சென்னையிலும் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் கீழ் குறைந்துள்ளது.

தேனாம்பேட்டை (16), அடையாறு (28) மண்டலங்களில் மட்டுமே இரட்டை இலக்க எண்களில் கரோனா பாதிப்பு உள்ளது. மற்ற 13 மண்டலங்களிலும் மணலி, மாதவரத்தைத் தவிர்த்து மற்ற மண்டலங்களில் ஒற்றை இலக்கத்திலேயே கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7.51 லட்சமாகவும், குணமடைந்தோர் 7.42 லட்சமாகவும், பலி எண்ணிக்கை 9,068 ஆகவும் உள்ளது. 98 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →