சாத்தான்குளத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி
சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் குருத்தோலை பவனி கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலயத்தில் குருத்தோலை பவனி கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட முந்திய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், சாத்தான்குளம் தூய ஸ்தேவான் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. ஆலயம் முன்பு இருந்து தொடங்கிய பவனியை சேகர குருவானவர் செல்வன் மகாராஜா தொடங்கி வைத்தார்.
Advertisement
Advertisement
பவனி ஆனது ஆலய முன்பிருந்து தொடங்கி ஜெபஞானபுரம், தட்ச மொழி மாணிக்கவாசகம், ஆசிர்வாதபுரம் வழியாக பெருமாள் சாமி கோயில் தெருவில் வந்து மீண்டும் தேவாலயம் முன்பு நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற மக்கள் கையில் குருத்தோலையை கையேந்தி ஓசன்னா பாடலை பாடி ஊர்வலமாக வந்தனர்.
இதைத் தொடர்ந்து சேகர குருவானவர் செல்வன் மகராஜா தலைமையில் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது இதில் சபை மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | பனிமய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி