தமிழ்நாடு

கட்டணம் எதற்கு? குப்பையைக் காணவா? மாமல்லபுரம் குறித்து நீதிமன்றம் கேள்வி

DIN


சென்னை: சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் எதற்கு வசூலிக்கிறீர்கள்? மாமல்லபுரத்திலிருக்கும் குப்பையைக் காணவா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பக்கிங்காம் கால்வாய் பகுதி குப்பையைப் பிரிக்கும் இடமாக மாற்றப்பட்டு வருவதை எதிர்த்து, கடந்த 2018ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின்போது, குப்பைகளை அகற்றி, மாமல்லபுரத்தை தூய்மையாக பராமரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் எதற்காக கட்டணம் வசூலிக்கிறீர்கள்? அங்கிருக்கும் குப்பையைக் காணவா? என்று கேள்வி எழுப்பியதோடு,  மாமல்லபுரம் சுற்றுலாத் தலம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யாத அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். விதிகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT