தமிழ்நாடு

பொள்ளாச்சி: தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயி தற்கொலை

பொள்ளாச்சி அருகே தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

DIN

பொள்ளாச்சி அருகே தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

தமிழகத்தில் தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாகக் கொப்பரை தேங்காய் விலையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில்  பொள்ளாச்சி அருகே உள்ள வாழைக்கொம்பு நாகூர் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி சம்பத்குமார் தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தென்னை மர மாத்திரையைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆனைமலை போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .
மேலும் தென்னை விவசாயி தற்கொலை செய்து கொண்டதால் பொள்ளாச்சி பகுதியில் விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

SCROLL FOR NEXT