தமிழ்நாடு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

DIN


மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 1,85,000  கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.  மழையின் காரணமாக கர்நாடகா அணைகளிலிருந்து அதிக அளவில் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் உபரி நீர் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,10,000 கன அடிவரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி  வெள்ள நீரும் வெளியேற்றப்பட உள்ளது.

வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,85,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,85,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1,62,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் உபரி நீர் கால்வாய் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

அணையின் நீா்மட்டம் 120.13 அடியாகவும், நீா் இருப்பு 93.67 டி.எம்.சி.யாகவும் உள்ளது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடா்வதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சுமார் 1,90,000 கன அடி முதல் 2,10,000 கன அடி வரை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீா்த் திறப்பு எந்நேரமும் அதிகரிக்கப்படும் என்பதால் காவிரிக் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT