கோப்புப்படம் 
தமிழ்நாடு

நாளை மறுநாள் சுதந்திர தின விழா ஒத்திகை

நாளை மறுநாள்(ஆகஸ்ட் 6) சுதந்திர தின விழா ஒத்திகை சென்னை ராஜாஜி சாலையில் நடைபெற உள்ளது.

DIN

சென்னை: நாளை மறுநாள்(ஆகஸ்ட் 6) சுதந்திர தின விழா ஒத்திகை சென்னை ராஜாஜி சாலையில் நடைபெற உள்ளது.

சென்னை ராஜாஜி சாலையில் ஆகஸ்ட் 6, 11, 13 ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் காலை 8 மணிக்கு சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சென்னை ராஜாஜி சாலையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் சுதந்திர தினத்தன்று அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

ஆனால், கரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதந்திர தினவிழாவில் மக்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT