தமிழ்நாடு

திருப்பூரில் காங்கிரஸார் சாலை மறியல்: 100 பேர் கைது!

மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 100 பேர்  திருப்பூர் வடக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

DIN

மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 100 பேர்  திருப்பூர் வடக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணன் தலைமை ஏற்றார்.

இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு சமையல் எரிவாயு  உருளையின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றனர்.

தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 12 பெண்கள் உள்பட 100 பேரை திருப்பூர் வடக்கு காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனை காரணமாக திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT